search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "look out notice"

    நூற்றுக்கணக்கான பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்படும் தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. #Idols #RanveerShah
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்கள், ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து மட்டும் 150-க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.

    இந்த சிலைகளை முறைப்படி வாங்கியதாக ஏற்கனவே ரன்வீர் ஷா ஆதாரங்கள் சமர்ப்பித்து இருந்தாலும், அவை முறையாக இல்லாததால் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது ரன்வீர் ஷாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளது.

    அனைத்து விமான நிலையங்களுக்கும் அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் மூலம், ரன்வீர் ஷா சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது தடுக்கப்பட்டுள்ளது. #Idols #RanveerShah
    ×