செய்திகள்

சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? கலைச்செல்வன் எம்.எல்.ஏ கேள்வி

Published On 2017-08-25 18:20 GMT   |   Update On 2017-08-25 18:20 GMT
இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என முதல்வர் பழனிசாமிக்கு டி.டி.வி தினகரன் அணியில் இணைந்துள்ள கலைச்செல்வன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், சென்னை அடையாறில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு இன்று தெரிவித்தார்.  இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.

டிடிவி தினகரனை சந்தித்த பின் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் செய்தியார்களிடம் கூறியதாவது:

122 எம்.எல்.ஏக்களில் ஒருவரை துணை முதலமைச்சராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சராக்கியது ஏன்? பன்னீர் செல்வத்தை துணை முதல்வராக்க வேண்டிய கட்டாயம் என்ன? என்னை போன்று மனக்குமுறலுடன் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது. ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரை கூட ஏன் துணை முதல்வராக விரும்பவில்லை. எங்கேயோ ஒரு இடத்தில் கட்சியை அடமானம் வைக்க நினைக்கும் ஓபிஎஸ்க்கு பொறுப்பு தந்தது ஏன்?

இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர்களுக்கெல்லாம் ஒருங்கிணைப்பாளர் பதவி தருகிறீர்கள். கட்சியை உடைத்து இரட்டை இலை சின்னத்தையும் ஓபிஎஸ்தான் முடக்கினார். ஜெயலலிதாவின் ஆன்மா என்னை போன்றவர்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. முதல்-அமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் நன்றி மறந்து செயல்படக்கூடாது.

இவ்வாறு கலைச்செல்வன் கூறினார்.
Tags:    

Similar News