செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

Published On 2017-08-22 17:31 GMT   |   Update On 2017-08-22 17:31 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஷமோலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
டேஹ்ராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஷமோலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷமோலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் பீதியுடன் வீடுகளிலிருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.



ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், உயிர்சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News