செய்திகள்

அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது: மத்திய மந்திரிகளுக்கு மோடி எச்சரிக்கை

Published On 2017-08-20 09:15 GMT   |   Update On 2017-08-20 09:15 GMT
அரசு வாகனங்களை மந்திரிகளோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ தவறான வழிகளில் பயன் படுத்தக்கூடாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சி மீது ஊழல் கரை படிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.

2019 தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக ஊழலில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்வது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அரசு வாகனங்களை மந்திரிகளோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ தவறான வழிகளில் பயன் படுத்தக்கூடாது என்று எச்சரித்துள்ளார். மந்திரிகள் அரசு பயணமாக செல்லும் விருந்தினரை மாளிகையில் தான் தங்க வேண்டும் என்றும் 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மந்திரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

சில மந்திரிகள் அரசு விருந்தினர் மாளிகையை விட்டு விட்டு நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதால் மோடி கடும் அதிருப்தியில் உள்ளார். புதன்கிழமை நடந்த மந்திரிசபை கூட்டத்தின் போது மோடி மந்திரிகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

Tags:    

Similar News