செய்திகள்

முசாபர்நகர் ரெயில் விபத்து: இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்க சுரேஷ் பிரபு உத்தரவு

Published On 2017-08-20 06:42 GMT   |   Update On 2017-08-20 06:42 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் பூரி-ஹரித்வார்-கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட விபத்தில் இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்குமாறு ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டத்துக்குட்பட்ட கடாவுளி பகுதியில் ஹரித்வாரில் இருந்து பூரி நகரை நோக்கிச் செப்ற  பூரி-ஹரித்வார்-கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் நேற்று மாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 156 பேர் காயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் பலியானோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என ரெயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கோரச் சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்து இவ்விபத்துக்கான காரணம் என்ன? என்ற முதல்கட்ட அறிக்கையின் அடிப்படையில் இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்குமாறு ரெயில்வே நிர்வாகத்தின் தலைவருக்கு ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News