செய்திகள்

உ.பி.: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பிடிவாரண்ட்

Published On 2017-08-19 08:19 GMT   |   Update On 2017-08-19 08:19 GMT
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து முசாபநகர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் முசாபர்நகர் எம்.எல்.ஏ. கபில் அகர்வால் மற்றும் பூதானா எம்.எல்.ஏ. உமேஷ் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரெயில் சேவையில் இடையூறு செய்தது தொடர்பாக, முசாபர்நகர் ரயில்வே போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணை உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், இரு எம்.எல்.ஏ.க்களும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு முசாபநகர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கபில் அகர்வால் மற்றும் உமேஷ் மாலிக் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை தலைமை நீதிபதி கோபால் திவாரி பிறப்பித்தார்.

மேலும், அவர்களை செப்டம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News