செய்திகள்

மணிப்பூர்: 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 140 தங்கக்கட்டிகள் பறிமுதல்

Published On 2017-08-18 12:40 GMT   |   Update On 2017-08-18 12:40 GMT
மணிப்பூரில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 140 தங்கக்கட்டிகளை லாரி மூலம் இம்பாலுக்கு கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
இம்பால்:

இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள மோரே பகுதியிலிருந்து நேற்று மாலை லாரி ஒன்று இம்பால் நோக்கி சென்று கொண்டிருந்தது. மோரே-இம்பால் நெடுஞ்சாலையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்திய போது லாரியில் தங்கம் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சுங்கத்துறையின் கடத்தல் தடுப்புப் படை கண்காணிப்பாளர் டபுள்யு.எச்.கே.லுவாங் கூறுகையில், ‘எம்.டி.கமல் ஹாசன் என்பவர் லாரியில் 140 தங்கக்கட்டிகளை கடத்திச் சென்றுள்ளார். அவரை அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் கைது செய்தனர். அவரிடமிருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று கமல் மற்றும் அவர் கடத்திய 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News