செய்திகள்

முத்தலாக் முறையை எதிர்க்கும் பெண்களை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

Published On 2017-08-15 06:36 GMT   |   Update On 2017-08-15 06:36 GMT
முத்தலாக் முறையை எதிர்க்கும் பெண்களை வணங்குகிறேன், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பேன் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பேசியுள்ளார்.
புதுடெல்லி:

நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி உரையாற்றினார். 

மோடி தனது உரையில், முத்தலாக முறையை எதிர்க்கும் பெண்களை வணங்குகிறேன், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ”மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. மகாத்மாவும், புத்தரும் பிறந்த இந்திய மண்ணில் வன்முறை, வகுப்புவாதத்திற்கு இடமில்லை. புதிய திசையை நோக்கி நாட்டை வழிநடத்தி வருகிறோம். நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்களைக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் நடைபோடலாம்” என்றார். 

மத்திய அரசு முத்தலாக் முறைக்கு எதிராக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது.
Tags:    

Similar News