செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் பலி

Published On 2017-08-12 17:35 GMT   |   Update On 2017-08-12 17:35 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஜக்ரம் சிங் தோமர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஜக்ரம் சிங் தோமர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த இரு மாதங்களில் பலமுறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.



இந்நிலையில், இன்று மாலை கே.ஜி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். இதற்கு, இந்திய ராணுவத்தின் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் இந்திய வீரர் ஜக்ரம் சிங் தோமர் (42) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நீடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News