செய்திகள்

தனியுரிமையின் அனைத்து அம்சங்களும் அடிப்படை உரிமையின் கீழ் வராது: மத்திய அரசு

Published On 2017-07-26 22:38 GMT   |   Update On 2017-07-26 22:38 GMT
தனியுரிமையின் அனைத்து அம்சங்களும் அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஆதார் எண் முதலில் கொண்டு வந்த போது, நாட்டில் நடைபெற்று வரும் குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்ககளை மத்திய அரசு கூறியது. சமூக நல திட்டங்களுக்கு இது கட்டாயமாக்கப்படாது என்று முதலில் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் படிப்படியாக பல்வேறு அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இதனால், கேஸ், ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல், ஆதார் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது.

ஆதார் தொடர்பான வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு பின்னர் தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து, உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தனியுரிமையின் அனைத்து அம்சங்களும் அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் வாதாடினார்.
Tags:    

Similar News