செய்திகள்

இந்தியாவில் 1000 பேருக்கு ஒன்றுக்கும் குறைவான மருத்துவரே உள்ளனர்-பாராளுமன்றம் அறிவிப்பு

Published On 2017-07-21 11:20 GMT   |   Update On 2017-07-21 11:20 GMT
இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த தகவலின்படி, இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவுக்கும் குறைவாகவே உள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி அனுபிரியா படேல், இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை பற்றிய தகவலை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

‘இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 10,22,859 அலோபதி மருத்துவர்கள் மருத்துவ கவுன்சிலில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதன்படி 80 சதவீதம் மருத்துவர்கள் அதாவது 8.18 லட்சம் மருத்துவர்கள் தற்போது மருத்துவச் சேவையில் இருக்கின்றனர். மக்கள் தொகை 1.33 பில்லியன் இருக்கும் நிலையில், மக்கள் தொகை-டாக்டர் விகிதமானது 1000:0.62 என்ற அளவில் உள்ளது.

உலக சுகாதார அமைப்பு 1000 பேருக்கு ஒரு மருத்துவர் என்று நிர்ணயித்த நிலையில் இந்தியாவில் குறைவான மருத்துவர்களே உள்ளனர்.

மேலும் இந்தியாவில் இருக்கும் 479 மருத்துவ கல்லூரிகளில் கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக சேர்க்கப்பட்ட 12,870 மருத்துவ இடங்களையும் சேர்த்து மொத்தம் 67,218 இடங்கள் உள்ளன. இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News