செய்திகள்

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய லெய்சீட்சு: புதிய முதல்வரானார் ஜெலியாங்

Published On 2017-07-19 08:59 GMT   |   Update On 2017-07-19 09:00 GMT
நாகாலாந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் லெய்சீட்சு தவறியதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெலியாங்கை முதல்வராக பதவியேற்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
கோகிமா:

நாகலாந்தில் முதல்வர் லெய்சீட்சுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள முன்னாள் முதல்வர் ஜெலியாங் தனக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அத்துடன், தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு கவர்னரிடம் அணிவகுப்பும் நடத்தினார்.

இந்த அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் லெய்சீட்சு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் ஆச்சார்யா உத்தரவிட்டார். அதனை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த லெய்சீட்சு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இடைக்கால தடை பெற்றார். ஆனால், தொடர்ந்து விசாரணை நடத்திய ஐகோர்ட், லெய்சீட்சுவின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கவர்னர் மீண்டும் உத்தரவிட்டார்.

அதன்படி, நாகாலாந்து சட்டசபையில் முதல்வர் லெய்செட்சு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற் இருந்தது. ஆனால் லெய்சீட்சூ அவைக்கு வராததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெலியாங்கை முதல்வராக பதவியேற்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 22-ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News