செய்திகள்

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க மூன்றாவது யாத்ரீகர்கள் குழு புறப்பட்டுச் சென்றது

Published On 2017-07-01 09:38 GMT   |   Update On 2017-07-01 09:41 GMT
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான 4477 யாத்ரீகர்கள் அடங்கிய மூன்றாவது குழு இன்று புறப்பட்டுச் சென்றது.
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலயடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், 4477 யாத்ரீகர்கள் கொண்ட 3-வது குழுவினர் பஹல்காம் முகாமில் இருந்து இன்று அதிகாலை 136 வாகனங்களில் புறப்பட்டு குகைக் கோயிலுக்கு சென்றனர்.



இன்று மாலை பல்ட்டல் மலையடிவாரத்துக்கு இவர்கள் சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களையும் சேர்த்து ஜம்மு அடிவார முகாமில் இருந்து மட்டும் சென்ற 58,032 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றே, புறப்பட வேண்டிய இந்த குழு, ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பாதைகள் சரி செய்யப்பட்டதும் இன்று யாத்ரீகர்கள் குழு தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர்.
Tags:    

Similar News