செய்திகள்

காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் 150 பேரை கொல்ல தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2017-06-26 07:51 GMT   |   Update On 2017-06-26 07:51 GMT
காஷ்மீரில் விரைவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு:

தீவிரவாத தலைவர்களில் ஒருவனான வானி சுட்டுக் கொல்லப்பட்டதன் முதலாண்டு தினம் வர உள்ளது. அதற்கு முன்னதாக காஷ்மீரில் பல இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

காஷ்மீரில் தற்போது அமர்நாத் பனி குகையில் தரிசனம் செய்ய பக்தர்கள் யாத்திரை சென்றபடி உள்ளனர். அவர்களில் 150 பேரை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை கண்டறிந்து எச்சரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பல பகுதிகளிலும் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு படையினரை உஷார்படுத்தும்படி உளவுத்துறை அறிவித்தியுள்ளது.



இன்று காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்பட சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தொழுகை முடிந்ததும் பல இடங்களில் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

வன்முறை கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதில் ஸ்ரீநகரில் 10 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.
Tags:    

Similar News