செய்திகள்

தமிழக சிறைக்கு மாற்ற வேண்டாம், நிரந்தரமாக விடுதலை செய்ய வேலையை பாருங்கள்: சசிகலா

Published On 2017-06-26 06:37 GMT   |   Update On 2017-06-26 06:37 GMT
தமிழக சிறைக்கு மாற்ற வேண்டாம், நிரந்தரமாக சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான வேலையை பார்க்க வேண்டும் என்று தமது வக்கீல்களுக்கு சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தினகரன், டாக்டர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் அடிக்கடி சந்தித்து வருகிறார்கள்.

கடந்த வாரம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்.

இது தவிர சசிகலாவின் வக்கீல்கள் அடிக்கடி சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்கள்.

அப்போது அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக இருப்பதால் அவரிடம் பேசி சென்னை புழல் சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்வதாக சசிகலாவிடம் வக்கீல்கள் கூறி உள்ளனர். ஆனால் இந்த கருத்தை ஏற்க சசிகலா மறுத்து விட்டார்.


சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்டுள்ள மறு ஆய்வு மனு விசாரணையை தீவிரப்படுத்தி தன்னை நிரந்தரமாக சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான வேலையை பார்க்கும்படி வக்கீல்களுக்கு சசிகலா கட்டளையிட்டு உள்ளார்.

தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றினால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்றும் எனவே சிறை மாற்றம் செய்யும் விவகாரத்தை கைவிடுமாறும் அவர் வக்கீல்களை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

Similar News