செய்திகள்
முன்னாள் எம்.பி. சகாபுதீன்.

பத்திரிகையாளர் கொலை வழக்கு: லாலு பிரசாத் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கைது

Published On 2017-05-29 08:03 GMT   |   Update On 2017-05-29 08:03 GMT
பத்திரிகையாளர் கொலை வழக்கில் லாலு பிரசாத் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கைது செய்யப்பட்டார்.
பாட்னா:

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் துணை நிறுவனமான இந்துஸ்தான் இந்தி பதிப்பின் சிவான் பகுதி தலைமை செய்தியாளராக பணியாற்றியவர் ராஜ்தியோ ரஞ்சன். இவர் சிவானில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதி மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


பத்திரிகையாளர் ராஜ்தியோ ரஞ்சன்.

இந்த கொலையில் பீகார் முன்னாள் எம்.பி.யும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய பிரமுகருமான சகாபுதீன் மீது சந்தேகம் இருப்பதாக ரஞ்சனின் மனைவி போலீசில் புகார் செய்து இருந்தார்.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சகாபுதீன் தயாரித்து வைத்திருந்த 23 பேர் கொண்ட கொலைப் பட்டியலில் ராஜ்தியோ ரஞ்சனின் பெயர் 7-வது இடத்தில் இடம் பெற்று இருந்தார்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சகாபுதீன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. இதுபற்றி செய்திகள் வெளியிட்டதால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்து கொலை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சகாபுதீன் டெல்லி திகார் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுவித்து வருகிறார். ஜெயிலில் இருந்தவாறே தனது ஆட்களை ஏவி கொலை செய்திருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டியது. இதையடுத்து சகாபுதீனை பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைது செய்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டது.

இதற்காக முசாபர்பூர் கோர்ட்டில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. கோர்ட்டு அனுமதி அளித்தை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் திகார் ஜெயிலில் இருக்கும் சகாபுதீனை மீண்டும் கைது செய்து விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து சகாபுதீனிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News