செய்திகள்

செலவுக்கணக்கை தாக்கல் செய்யாத 19 பேர் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் கமிஷன் உத்தரவு

Published On 2017-05-26 04:07 GMT   |   Update On 2017-05-26 04:07 GMT
செலவுக்கணக்கை தாக்கல் செய்யாத 19 பேர் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவு வெளியிட்டுள்ளது
சென்னை:

தமிழக அரசிதழில் இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவுக்கணக்கை தேர்தல் கமிஷனிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செலவுக்கணக்கை ஒப்படைக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கோபிசெட்டிப்பாளையம், உதகமண்டலம், மேலூர், மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, போடிநாயக்கனூர், வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட 19 பேர், தங்களின் தேர்தல் செலவுக்கணக்கை காட்டவில்லை. எனவே அவர்கள் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News