செய்திகள்

டி.வி. நடிகையுடன் அரசு காரில் சென்ற டி.ஐ.ஜி.: விசாரணை நடத்த பினராயி விஜயன் உத்தரவு

Published On 2017-05-24 08:01 GMT   |   Update On 2017-05-24 08:01 GMT
கேரள மாநிலத்தில் சிறைத்துறை தெற்குமண்டல டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் பிரதீப். இவர் மீது தற்போது கூறப்பட்டுள்ள புகார் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிறை தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பிரபல மலையாள டி.வி. நடிகை ஒருவருக்கு சிறைத்துறை அழைப்பு விடுத்திருந்தது.

அந்த விழாவில் பங்கேற்க மலையாள டி.வி. நடிகையை சிறைத்துறை டி.ஐ.ஜி. பிரதீப் அரசு காரில் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அரசு காரை விதிமுறையை மீறி தவறாக அவர் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டி.ஜி.பி. பிரதீப்பின் இந்த நடவடிக்கை பற்றி முதல்-மந்திரி பினராயி விஜயன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் சிறைத்துறையின் இயக்குனர் ஸ்ரீலேகாவிடம் இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் பற்றி சிறைத்துறை இயக்குனர் ஸ்ரீலேகா விசாரணை நடத்தி அரசுக்கு விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பிறகு அந்த டி.ஐ.ஜி. மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.

Tags:    

Similar News