செய்திகள்

மேற்குவங்காளத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான பாம்பு விஷம் பறிமுதல்

Published On 2017-05-24 00:53 GMT   |   Update On 2017-05-24 00:53 GMT
மேற்குவங்காளத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான பாம்பு விஷத்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தினாஜ்பூர்:

மேற்குவங்காள மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காராம்பூர் என்ற இடத்தில் மர்மநபர்கள் சிலர் கள்ளச்சந்தையில் பாம்பின் விஷத்தை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு எல்லைப்பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இணைந்து கங்காராம்பூரில் அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு மர்ம நபர் ஒருவர் கண்ணாடி ஜாடியில் சந்தேகத்திற்கிடமான பொருள் வைத்திருப்பதை பாதுகாப்புபடை வீரர்கள் கண்டறிந்து, அவரை சுற்றிவளைத்தனர்.

விசாரணையில், அவர் வைத்திருந்தது பாம்பின் விஷம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.12 கோடி இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டிருக்கும் அந்த நபர் கங்காராம்பூரை சேர்ந்த சுதீப் திக்னா என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News