செய்திகள்

ரூ.10 கோடி ஊழல்: கெஜ்ரிவால் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை

Published On 2017-05-23 21:46 GMT   |   Update On 2017-05-23 21:46 GMT
ரூ.10 கோடி ஊழல் தொடர்பாக கெஜ்ரிவால் உறவினர் சுரேந்தர்குமார் பன்சால் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுடெல்லி:

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய உறவினர், சுரேந்தர் குமார் பன்சால். இவர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் பல்வேறு நிறுவனங்களின் பெயரால் போலி பில்களை அளித்து ரூ.10 கோடி அளவுக்கு பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் பேரில், 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே சுரேந்தர்குமார் பன்சால் கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகளான பவன் குமார், கமல்குமார் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன. 
Tags:    

Similar News