செய்திகள்

பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார்

Published On 2017-05-23 14:00 GMT   |   Update On 2017-05-23 14:00 GMT
நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சாமியார் சந்திராசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன், இந்த வழக்கில் சாமியார் சந்திராசாமியிடம் விசாரிக்கப்பட வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதேபோல் பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்திருக்கிறது.



இந்நிலையில் நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த சந்திரா சாமிக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிசிசை பெற்று வந்தார். டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து போன நிலையில், இன்று டெல்லியில் அவர் காலமானார்.

சந்திராசாமி 1948-ம் ஆண்டு பிறந்ததாகவும், அவரது தந்தை ராஜஸ்தானின் பெஹ்ரோர் பகுதியில் இருந்து டெல்லிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News