செய்திகள்

தமிழக புதிய கவர்னர் மே 12-ந்தேதி அறிவிப்பு?

Published On 2017-04-28 06:38 GMT   |   Update On 2017-04-28 06:38 GMT
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ந்தேதி இலங்கை செல்கிறார். இலங்கை செல்லும் முன்பு அவர் தமிழகத்திற்கு புதிய கவர்னரை நியமிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:

தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது.

மராட்டிய கவர்னராக பணியாற்றும் வித்யாசாகர்ராவ் தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பாளராக செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அவர் தமிழக பொறுப்பு கவர்னராக இருந்து வருகிறார்.

தமிழகத்துக்கு தனி கவர்னரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் மத்திய அரசு கவர்ரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இந்த நிலையில் தமிழக புதிய கவர்னர் மே மாதம் 12-ந் தேதி அறிவிக்கப்படலாம் என்ற தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ந்தேதி இலங்கை செல்கிறார். இலங்கை செல்லும் முன்பு அவர் கவர்னரை நியமிக்க முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தோடு மத்திய பிரதேசம், மேகாலாயா, அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலத்துக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த மாநிலங்களிலும் பொறுப்பு கவர்னர்களே உள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கு தேச கவர்னராக நரசிம்மன் உள்ளார். வருகிற 2-ந்தேதியுடன் அவரது பதவிகாலம் முடிகிறது. இதனால் அங்கும் புதிய கவர்னர் நியமிக்கப்படலாம்.


நரசிம்மன் பணியை மேலும் பயன்படுத்தி கொள்ள மோடி திட்டமிட்டுள்ளார்.

இதனால் அவர் வேறு ஒரு மாநிலத்தில் கவர்னராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நரசிம்மலு என்பவர் மேகாலய மாநில புதிய கவர்னராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கவர்னர் நியமனத்துக்கு முன்பு மந்திரிசபை மாற்றி அமைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்ற கூறப்படுகிறது.

Similar News