செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் குருதாஸ் காமத் திடீர் ராஜினாமா

Published On 2017-04-26 09:58 GMT   |   Update On 2017-04-26 09:58 GMT
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தேசிய செயலாளர்களில் ஒருவருமான குருதாஸ் காமத் திடீரென தனது கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மும்பை:

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது உள்துறை இணை மந்திரியாக பொறுப்பு வகித்த குருதாஸ் காமத் தனது இளமைக்காலம் முதலே கட்சியின் வளர்ச்சிக்காக தீவிர களப்பணியாற்றியுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த இவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக வலம் வந்த இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வட கிழக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சில காலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்த குருதாஸ் காமத், தற்போது தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு மத்திய மந்திரி ஸ்ருதிமி இராணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி குருதாஸ் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News