செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு

Published On 2017-04-26 09:17 GMT   |   Update On 2017-04-26 09:17 GMT
ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

ஐந்து நாள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் பேசினர்.

சந்திப்பு நிறைவடைந்த பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வணிகம், இயற்கை எரிவாயு தொடர்பான சில ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின.



பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார்.



இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக முன்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கண்டியில் நிருபர்களை சந்திக்கும் போது, “இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்திய பயணத்தின்போது திரிகாணமலை மாவட்ட வளர்ச்சி தொடர்பாக பேசப்படும். திரிகோணமலையில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ஜப்பானுடன் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாகும்” என தெரிவித்திருந்தார்.

Similar News