செய்திகள்

கோஷ்டி மோதலில் 4 பேர் உயிரிழப்பு: எல்லை பிரச்சனையால் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் இழுபறி

Published On 2017-04-25 11:33 GMT   |   Update On 2017-04-25 11:33 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேர் பலியான நிலையிலும், எல்லைப் பிரச்சனையால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார், பாரத்பூர் மாவட்ட எல்லையில் நிலத்தகராறு காரணமாக இரு தரப்பினரிடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மோதல் மேலும் வலுப்பெறாமல் தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இத்தனை களேபரம் நடந்தும் காவல்நிலையத்தில் இன்று மாலை வரையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. காரணம், எல்லையில் உள்ள அந்த பகுதி எந்த மாவட்டதைச் சேர்ந்தது? என்பதை துல்லியமாக கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாரத்பூர் மாவட்டம் நத்பாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்றும், அதனால் அவர்கள்தான் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் ஆழ்வார் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறுகிறார். அதேசமயம், பாரத்பூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலில், சம்பவம் நடந்த இடம் ஆழ்வார் மாவட்டத்திற்குபட்ட பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News