செய்திகள்

செல்போன் பேச வேண்டாம் என கண்டித்ததால் நர்சிங் மாணவி தற்கொலை

Published On 2017-04-25 10:51 GMT   |   Update On 2017-04-25 10:52 GMT
செல்போனில் பேச வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த நர்சிங் மாணவி வி‌ஷம் குடித்து தறகொலை செய்து கொண்டார்.

திருப்பதி:

திருப்பதி கலிகிரி மண்டலம் செரவு முந்து பள்ளே கிராமத்தை சேர்ந்தவர் ஹேமலதா (வயது20). இவர் திருப்பதி தேவஸ்தான நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இரவு நேரங்களில் செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதனை கவனித்த விடுதி வார்டன் அவரை அழைத்து பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனால் மாணவி தன் செல்போன் பேச்சை நிறுத்தவில்லை. இது குறித்து வார்டன் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த பெற்றோர் மகளை கண்டித்ததுடன் மீண்டும் இது போல் புகார் வந்தால் செல்போனை தங்களுடன் எடுத்து செல்வதாக கூறினர். இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலிபிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News