செய்திகள்

ஆளுநருடன் ஆதித்யநாத் சந்திப்பு: சட்டமன்றக் கூட்டத்தை நடத்த ஆலோசனை

Published On 2017-04-22 16:21 GMT   |   Update On 2017-04-22 16:21 GMT
உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இன்று கவர்னரை ராம் நாயக்கை சந்தித்து சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி உள்ளார். 

இந்நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று ராஜ்பவன் சென்று ஆளுநர் ராம் நாயக்கை சந்தித்தார். அப்போது, முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

மேலும், ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றது மரபாக உள்ளது.

மேலும், இந்த சந்திப்பின்போது மே 1-ம்தேதி ராஜ்பவனில் நடைபெற உள்ள மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இரண்டு நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

Similar News