செய்திகள்

திருமண சடங்கில் பரிதாபம்: வயிற்றில் வாள் பாய்ந்து சிறுவன் பலி

Published On 2017-04-21 10:48 GMT   |   Update On 2017-04-21 10:49 GMT
மத்திய பிரதேச மாநிலத்தின் நீமுக் மாவட்டத்தில் திருமண சடங்கின் போது வயிற்றில் வாள் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் திருமணத்தை நிறுத்தியதோடு அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தின் திருமண சடங்கின் ஒரு பகுதியாக மரத்தில் இருக்கும் இலைகளை வெட்டும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. 

இவ்வாறு நீமுக் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண சடங்கில் மாப்பிள்ளை இலையை வெட்டும் போது அருகில் நின்று கொண்டிருந்த சிறுவனின் வயிற்றில் வாள் பாய்ந்ததில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.



படுகாயம் அடைந்த அந்த சிறுவனை சம்பவம் நடந்த கிராமத்தில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமணைக்கு தூக்கி சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தை அடுத்து நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. 

திருமண சடங்கின் போது ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மாப்பிள்ளையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News