செய்திகள்

உலக சுற்றுலா பட்டியலில் இந்தியாவுக்கு 40-வது இடம்

Published On 2017-04-07 12:46 GMT   |   Update On 2017-04-07 12:46 GMT
உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள சுற்றுலா பட்டியலில் இந்தியா 12 இடங்கள் முனனேறி 40-வது இடத்தைப் பிடித்து உள்ளது.
புதுடெல்லி:

உலக அளவில் சுற்றுலா மற்றும் பயண போட்டித்தன்மைகள் கொண்ட நாடுகள் பட்டியலை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. இதில், ஸ்பெயின் நாடு முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இந்தியா 12 இடங்கள் முன்னேறி தற்போது 40-வது இடத்தில் உள்ளது. ஆசிய அளவில் சுற்றுலாத்துறை அதிக அளவில் வளர்ச்சி கண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆனாலும், உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட பட்டியலில், ஜப்பான் (4-வது இடம்), சீனா (13-வது இடம்) போன்ற நாடுகளை விட பின்தங்கியுள்ளது.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன பட்டியல்கள் மற்றும் சிறந்த டிஜிட்டல் படைப்புகள் மூலமாக இந்தியா தனது பண்பாட்டு வளங்களை தொடர்ந்து வளப்படுத்துகிறது, பண்பாட்டு மையங்களை பாதுகாக்கிறது என உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

வருகை விசா, இ-விசாக்கள் மற்றும் அடிமட்ட அளவில் போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற வலுவான கொள்கைகளும், இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News