செய்திகள்

காவி உடை அணிவதால் என்னைப்பற்றி தவறான கருத்துக்கள் உள்ளன: யோகி ஆதித்யநாத்

Published On 2017-04-03 14:31 GMT   |   Update On 2017-04-03 14:31 GMT
காவி உடை அணிவதால் தன்னைப்பற்றி தவறான கருத்துகள் நிலவுவதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
புது டெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கட்சி 312 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து காவி உடை அணிந்த இளம் துறவி யோகி ஆதித்யநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசு அலுவலகங்களில் பான் மசாலா மெல்லக்கூடாது, சட்டவிரோத இறைச்சிக்கூடங்கள் மூடல் என தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை யோகி ஆதித்யநாத் பிறப்பித்து வருகிறார்.

இந்த நிலையில், காவி உடை அணிவதால் தன்னைப்பற்றி தவறான கருத்துகள் நிலவுவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.



இதுகுறித்து அவர் கூறுகையில் “ என்னைப்பற்றி நிறைய தவறான கருத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. நான் காவி உடையில் இருப்பதாக நிறைய மக்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் நாட்டில் ஏராளமான பேர் காவி உடையை வெறுப்பவர்களாக உள்ளனர்.என்னுடைய வேலைத்திறமையால் அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வெல்வேன். உத்தர பிரதேசத்தை ஊழலற்ற அரசாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.

இன்னும் 14 தினங்களில் கரும்பு விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 முதல் 6 சர்க்கரை ஆலைகள் மாநிலம் முழுவதும் தொடங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்திருக்கிறார்.

Similar News