செய்திகள்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைக்கு ரூ.1 கோடி விலை அறிவித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கைது

Published On 2017-03-28 20:55 GMT   |   Update On 2017-03-28 20:55 GMT
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைக்கு ரூ.1 கோடி விலை அறிவித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி குந்தன் சந்திராவத்தை போலீசார் கைது செய்தனர்.
உஜ்ஜைன்:

முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகளின் ஆட்சி நடக்கிற கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி குந்தன் சந்திராவத் கண்டனம் தெரிவித்ததோடு, ‘ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர்களை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கொன்று வருகிறார்.

எனவே அவரது தலையை கொண்டு வருகிறவர்களுக்கு ரூ.1 கோடி பரிசை விலையாக தர தயார்’ என்று அறிவித்தார்.இதுபற்றிய அவரது அறிவிப்பு வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளதோடு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் குந்தன் சந்திராவத் வகித்து வந்த பதவியையும் பறித்தது.

இதற்கிடையே இது தொடர்பாக மாதவ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குந்தன் சந்திரவாத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Similar News