செய்திகள்

உ.பி.யில் நைஜிரிய மாணவர்கள் தாக்குதல்: அறிக்கை கேட்கிறார் சுஷ்மா சுவராஜ்

Published On 2017-03-27 19:30 GMT   |   Update On 2017-03-27 19:30 GMT
டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் நைஜிரிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரபிரதேச அரசினை வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட் நொய்டா பகுதியில் நைஜிரிய மாணவர்கள் சிலரை அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது. 

மாணவர்கள் நரமாமிசம் உண்ணுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த கும்பலாக சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், ஆப்பிரிக்காவில் இருந்து வந்து வசிப்பவர்கள் அனைவரும் உடனடியாக தங்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. தாக்குதல் நடைபெற்றது சில மணி நேரத்தில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரபிரதேச அரசை அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நேற்று இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நொய்டா அருகே உள்ள குகையில் உள்ள பூனைகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக இந்த பிரச்சனை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Similar News