செய்திகள்

காங்கிரஸ் தலைவரை சுட்டுக்கொன்ற துணை சபாநாயகர் மகன்: அருணாச்சலில் பயங்கரம்

Published On 2017-03-27 14:17 GMT   |   Update On 2017-03-27 14:17 GMT
துணை சபாநாயகர் மகன் காங்கிரஸ் தலைவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம், அருணாச்சல பிரதேசத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடாநகர்:

அருணாச்சல பிரதேசம் வெஸ்ட் சியாங் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கெஞ்ஜூம் கம்சியை சட்டசபை துணை சபாநாயகர் மகன் கஜூம் பக்ரா நேற்றிரவு ஹோட்டல் ஒன்றின் முன்வைத்து சுட்டுக்கொன்றார்.

இதுகுறித்து அருணாச்சல பிரதேச போலீஸ் உயரதிகாரி மாரி ரிபா கூறுகையில் “ நேற்றிரவு 10 மணியளவில் கெஞ்ஜூம் கம்சி,கஜூம் பக்ரா இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கம்சியை, பக்ரா தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.



தற்போது பக்ராவைக் கைது செய்து அவரிடமிருந்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளோம். அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்த சம்பவத்திற்கு அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு காரணமான குற்றவாளியை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பேற்று துணை சபா நாயகர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அக்கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் வெஸ்ட் சியாங் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News