செய்திகள்

3 வருடங்களில் 4200 குழந்தை உரிமை மீறல் புகார்கள்: பாராளுமன்றத்தில் தகவல்

Published On 2017-03-24 10:09 GMT   |   Update On 2017-03-24 10:09 GMT
நாடு முழுவதும் கடந்த மூன்று வருடங்களில் 4200 குழந்தை உரிமை மீறல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவ்வவ்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களில் 4200 குழந்தை உரிமை மீறல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1237 புகார்கள் குழந்தைகள் தவறான வழியில் நடத்தப்படுவது தொடர்பானது ஆகும்.

இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை இணை மந்திரி கிருஷ்ணா ராஜ் மக்களவையில் பேசுகையில், “4200 குழந்தை உரிமை மீறல் புகார்களில் மொத்தம் 507 புகார்கள் தேசிய குழந்தைகள் உரிமை பாதுபாப்பு ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 397 புகார்களும், குழந்தை தொழிலாளர் தொடர்பாக 94 புகார்களும்,
குழந்தை கடத்தல் தொடர்பாக 16 புகார்களும் பெறப்பட்டுள்ளன” என்றார்.



குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பாக மாதந்தோறும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் அறிக்கை சமர்பிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதற்கென தனி அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Similar News