செய்திகள்

துடைப்பம் எடுத்து ஆபீசை சுத்தம் செய்த உ.பி. மந்திரி

Published On 2017-03-23 16:18 GMT   |   Update On 2017-03-23 16:18 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் மந்திரி ஒருவர் துடைப்பம் எடுத்து தனது அலுவலகத்தை சுத்தம் செய்த தகவல் மற்றும் அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், தலைமைச் செயலக வளாகத்தை பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் சந்தித்தார்.

அப்போது, அரசு அலுவலகங்களில் சில இடங்களில் வெற்றிலைக் கறைகள் படிந்திருப்பதை கண்ட முதலமைச்சர் ஆதித்யநாத், அரசு அலுவலகங்களை சுத்தமாக வைக்க வேண்டும் என்று கூறியதுடன், பணியில் இருக்கும்போது பான் மசாலா போன்ற வாயில் மெல்லும் போதைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரி உபேந்திர திவாரி இன்று, சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்ததும், துடைப்பத்தை எடுத்து பெருக்கி, பின்னர் மாப் கொண்டு துடைத்துவிட்டார். அலுவலகத்திற்கு வெளியில் உள்ள பகுதியையும் சுத்தம் செய்தார்.

அவர் சுத்தம் செய்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Similar News