செய்திகள்

பா.ஜனதாவில் இணைந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக கவர்னர் ஆகிறார்

Published On 2017-03-23 07:46 GMT   |   Update On 2017-03-23 07:46 GMT
பாரதிய ஜனதாவில் இணைந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக கவர்னராக விரைவில் நியமிக்கப்படலாம் என்று பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
பெங்களூரு:

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதாவில் சேர்ந்தார்.

மூத்த அரசியல் தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு உள்ள இவர் மக்களுக்கு சேவை செய்வதில் மிகுந்த அனுபவம் பெற்று உள்ளார்.



அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதால் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. அனுபவசாலியான எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆலோசனைகள் பெற்று கட்சியின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் கூறும்போது, மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, நான் பாரதிய ஜனதாவில் இணைய முன்வந்தேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, ஆனந்த்குமார் ஆகியோர் உடனிருந்தனர். பாரதிய ஜனதாவில் இணைந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக கவர்னராக விரைவில் நியமிக்கப்படலாம் என்று பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

Similar News