செய்திகள்

இனி பல்கலைக்கழகங்கள் வழங்குகிற சான்றிதழ்களில் மாணவர்கள் புகைப்படம், ஆதார் எண் கட்டாயம்

Published On 2017-03-22 23:25 GMT   |   Update On 2017-03-22 23:36 GMT
“பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவ, மாணவியரின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் இடம் பெறச்செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ஜே.எஸ்.சந்து, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில், “பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவ, மாணவியரின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் இடம் பெறச்செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் “மாணவ, மாணவியர் படித்த கல்வி நிறுவனத்தின் பெயரையும் சான்றிதழ்களில் வெளியிடவேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

சான்றிதழ்களில் இப்படி பாதுகாப்பு அடையாள அம்சங்களை ஏற்படுத்துவது போலிகளை தடுக்கவும், பரிசோதனையை எளிதாக்கவும் உதவும் எனவும் கூறப்பட் டுள்ளது.

சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக மானியக்குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Similar News