செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்த 18 மாணவர்களை வெளியேற்றியது டி.ஏ.வி. கல்லூரி

Published On 2017-03-22 16:37 GMT   |   Update On 2017-03-22 16:37 GMT
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த 18 மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான டி.ஏ.வி. கல்லூரி உள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய கல்லூரியான இங்கு இளங்கலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து,  கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு நடத்திய விசாரணையில், இளங்கலை சட்டம் படிக்க சேர்ந்த மாணவர்கள் போலி சான்றிதழ்கள் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த 18 மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கல்லூரி முதல்வர் தேவேந்திர பாசின் தெரிவித்தார்.

மேலும், அந்த மாணவர்களின் முதல் செமஸ்டருக்கான அட்மிசனும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News