செய்திகள்

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: கனிமொழி வலியுறுத்தல்

Published On 2017-03-20 16:00 GMT   |   Update On 2017-03-20 16:00 GMT
பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தால் தான் சமூக நீதி உறுதி செய்யப்படும் என்று திமுக மாநிலங்களாவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் தலைநகர் புதுடெல்லி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டார்.

மக்களவை மற்றும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தற்போதையை அல்லது அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.

பா.ஜ.க. தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்த போதும், மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக எதுவும் செய்யாமல் இருக்கிறது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தால் தான் சமூக நீதி உறுதி செய்யப்படும்” வலியுறுத்தி உள்ளார்.

Similar News