செய்திகள்

உ.பி., உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் ஆட்சியமைப்போம்- அமித் ஷா சூளுரை

Published On 2017-03-11 10:48 GMT   |   Update On 2017-03-11 11:00 GMT
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மாபெறும் வெற்றி பெற்றுள்ள நிலையில் கோவா, மணிப்பூர் மாநிலங்களையும் சேர்த்து 4 மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மாபெறும் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. பஞ்சாபில் எங்கள் கூட்டணி 30 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. மக்கள் பா.ஜ.க.வின் அரசியல் செயல்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர்.



இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்லும். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியமைக்கும். பஞ்சாப் மாநிலத்தில் கூட நாங்கள் நல்ல நிலையிலான ஓட்டுகளை பெற்றுள்ளோம்.

இந்து - முஸ்லீம் பிரச்சனைகளை விட்டுத்தள்ளுங்கள், வாக்காளர் என்பவர் வாக்காளர் மட்டுமே. எங்கள் வளர்ச்சி அரசியல் சிறந்த நிலையை அடையும். இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி நாட்டிலேயே சிறந்த தலைவர் என்பது வெளிப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளும் இதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News