செய்திகள்

காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தில் நிகழ்ந்த திருட்டு

Published On 2017-03-06 18:45 GMT   |   Update On 2017-03-06 18:45 GMT
குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தி வசித்து வந்த சபர்மதி ஆசிரமத்தில் திருட்டு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு கூடுதலாக சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
காந்திநகர்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மகாத்மா காந்தி வசித்து வந்த சபர்மதி ஆசிரமம் தற்போது சுற்றுலா தலமாக இருக்கின்றது. இங்கு மகாத்மா காந்தி பயன்படுத்திய பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் ஆசிரம வளாகத்தில் இருந்த பொருட்கள் சில மர்ம நபர்களால் திருடப்பட்டன. குறிப்பாக வாய், காது, கண்களை மூடி இருக்கும் மூன்று குரங்கு பொம்மைகள் திருடப்பட்டன.



இந்நிலையில், ஆசிரம வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றன. ஏற்கனவே, 22 கேமராக்கள் இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் வளாகத்தில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சபர்மதி ஆசிரமத்தில் நடந்த திருட்டு குறித்து ஆசிரம நிர்வாகிகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Similar News