செய்திகள்

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் கைதிகள் மற்றும் மீனவர்கள் விடுதலை

Published On 2017-03-01 15:22 GMT   |   Update On 2017-03-01 15:22 GMT
இந்தியச் சிறைகளில் வாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த 39 கைதிகள் மற்றும் மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அமிர்தசரஸ்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அத்து மீறி மீன் பிடித்ததாக அவ்வப்போது இரு நாட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பரஸ்பர நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பது வழக்கம். இந்நிலையில், இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாகிஸ்தான் மீனவர்கள் உள்பட 39 கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட கைதிகள் வாகா- அட்டாரி எல்லை வழியாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு இந்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சக உயரதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு இறுதியில் பாகிஸ்தான் சிறையில் வாடிய இந்தியாவைச் சேர்ந்த 217 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுவித்ததற்கு பிரதிபலன் நடவடிக்கையாக இந்தியா, தற்போது பாகிஸ்தான் கைதிகளை விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News