செய்திகள்

டெல்லியில் இருந்து மதுரைக்கு விமான சேவையை தொடங்கியது இண்டிகோ

Published On 2017-03-01 13:42 GMT   |   Update On 2017-03-01 13:42 GMT
இந்தியாவில் பட்ஜெட் விமான போக்குவரத்து சேவை வழங்கிவரும் இண்டிகோ, தற்போது தனது நெட்வொர்க்கை மதுரைக்கும் விரிவுபடுத்தி உள்ளது.
புதுடெல்லி:

நடுத்தர வர்க்கத்தினர் பயணிக்கும் வகையில், பட்ஜெட் விமான போக்குவரத்து சேவை வழங்கி வரும் நிறுவனம் இண்டிகோ. பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இண்டிகோ தனது விமான சேவையை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.

அவ்வகையில் இண்டிகோ இன்று தனது வழித்தட நெட்வொர்க்கை மதுரைக்கு விரிவுபடுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு இந்த விமானம் இயக்கப்படுகிறது.

தெற்கு பிராந்தியத்தில் இருந்து வளர்ந்து வரும் தேவையை கருத்தில் கொண்டு மதுரைக்கு விமான சேவையை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இண்டிகோ தலைவர் ஆதித்யா கோஷ் தெரிவித்துள்ளார்.


குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட இண்டிகோ விமான நிறுவனம் தற்போது 42 நகரங்களுக்கு 883 தினசரி விமானங்களை இயக்குகிறது. இதில், 5 சர்வதேச நகரங்கள் ஆகும். மார்ச் 26-ம் தேதி முதல் மதுரை-ஐதராபாத் தினசரி விமான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

Similar News