செய்திகள்

உ.பி. வாக்காளர்கள் தங்கள் 15 வருட கோபத்தை தேர்தலில் காட்டுகின்றனர்: மோடி

Published On 2017-03-01 12:38 GMT   |   Update On 2017-03-01 12:38 GMT
உத்தர பிரதேச வாக்காளர்கள் தங்கள் 15 வருட கோபத்தை இந்தத் தேர்தலில் காட்டுவதாக, பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ளன. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தைக் கொள்ளையடித்தவர்களின் மீது உத்தர பிரதேச வாக்காளர்கள் தங்கள் 15 வருட கோபத்தை இந்தத் தேர்தலில் காட்டுகின்றனர் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.



உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தங்கள் மாநிலத்தைக் கொள்ளையடித்தவர்களின் மீதான கோபத்தை உத்தர பிரதேச மக்கள் இந்தத் தேர்தலில் காட்டுகின்றனர்.பாஜக மூன்றில் இரண்டு பங்கு அல்லது நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பெறும் என்பது தற்போதைய விவாதங்களில் தெரிய வருகிறது.

உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுவது முதல் 5 கட்ட தேர்தல்களிலும் உறுதியாகி விட்டது. மீதமிருக்கும் இரண்டு கட்ட தேர்தல்களிலும் பாஜகவுக்கு கிடைக்கப் போகும் வாக்குகள் பரிசு மற்றும் போனஸ் போன்றவை. காய்கறி கடைக்காரர் வாடிக்கையாளர்களுக்கு போனசாக கொத்தமல்லி, பச்சை மிளகாய் தருவது போல, மீதமிருக்கும் இரண்டு கட்ட தேர்தல்களிலும் வாக்காளர்கள் பாஜகவுக்கு போனஸ் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News