செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-நேபாள கூட்டு ராணுவப் பயிற்சி

Published On 2017-03-01 10:43 GMT   |   Update On 2017-03-01 10:43 GMT
இந்தியா மற்றும் நேபாள நாடுகள் இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி அடுத்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்க இருக்கிறது.
புதுடெல்லி:

இந்தியா மற்றும் நேபாள நாடுகள் இடையே ராணுவ உறவை பலப்படுத்தும் நோக்கில், சூரிய கிரண் என்ற பெயரில் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் நடப்பது வழக்கம். இந்நிலையில், சூர்ய கிரண்-XI என்ற பெயரில் இரு நாடுகளுக்கிடையே கூட்டு ராணுவப் பயிற்சி வரும் 7-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பிரதேசமான பிதோராகார் என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.



15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களிடம் உள்ள நவீன ஆயுதங்கள், எதிரிகளை தாக்கும் நுணுக்கங்கள் ஆகியவற்றை பரஸ்பரம் மற்றவர்களுக்கு பயிற்சியாக அளிப்பார்கள். மேலும், எதிரிகளை குறிவைத்து தாக்குதல், எல்லைப் பகுதிகளில் நடமாடும் கடத்தல்காரர்களை முழுவதுமாக ஒடுக்குவது குறித்தும் தீவிர பயிற்சி எடுக்க உள்ளனர்.

ராஜ்ய ரீதியான உறவு, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகள் இரு நாடுகளுக்கிடையே இருப்பதால், இந்த உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக இம்மாதிரியான ராணுவ பயிற்சி முகாம்கள் அவசியம் என இந்திய ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News