செய்திகள்

2008 தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் 11 பேருக்கு ஆயுள் - இந்தூர் நீதிமன்றம் அதிரடி

Published On 2017-02-27 10:39 GMT   |   Update On 2017-02-27 10:39 GMT
2008-ம் ஆண்டில் 57 உயிர்களை பலிவாங்கிய தொடர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட சிமி இயக்க முக்கிய நபர் உள்ளிட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து இந்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
போபால்:

கடந்த 2008-ம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கோர தாக்குதலில் சுமார் 57 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இந்த சதிச் செயலின் மூளையாக செயல்பட்ட சிமி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சாஃப்டர் நோகோரி மற்றும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பலரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.



இவர்கள் மீதான வழக்கு விசாரணை இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாகோரி உள்ளிட்ட 11 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

சிமி தீவிரவாத இயக்கமானது இந்தியாவில் செயல்பட கடந்த 2001-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News