செய்திகள்

பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற ஐ.ஐ.டி பொறியாளர்

Published On 2017-02-26 09:41 GMT   |   Update On 2017-02-26 09:41 GMT
ஒரிசா மாநில பஞ்சாயத்து தேர்தலில் ஐ.ஐ.டி பொறியாளர், முனைவர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஆகியோர வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புவனேஷ்வர்:

ஒரிசா மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பழுத்த அரசியல்வாதிகள் போட்டியிட்டாலும், கட்சி சார்பின்றி அரசியலில் ஆர்வம் உடைய படித்தவர்களும் சில இடங்களில் களமிறங்கினர்.

தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் ஆளும் பிஜு ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றன. மார்ஷாகை பகுதியில் உள்ள துமாகா கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்ற ராஜன் பெயூரா என்ற நபர் வெற்றி பெற்றுள்ளார். பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜன், தனது பணியைத் துறந்து அரசியலில் இறங்கியுள்ளார். அப்பகுதியில் நீடித்து வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கான்பதே தனது இலக்கு என ராஜன் தெரிவித்துள்ளார்.



சவுத்திரி என்ற மற்றொரு நபர் வழக்கறிஞராக பணியாற்றி அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். ஷில்லா பரிசத் என்ற பகுதித் தேர்தலில் இவர் வெற்றி பெற்றுள்ளார். ஊரகப் பகுதியில் அரசின் திட்டங்கள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதை நிவர்த்தி செய்வதே தனது இலக்கு என சவுத்திரி உறுதியுடன் தெரிவித்துள்ளார். மேலும், இப்பகுதி மக்களுக்கு சட்ட ரீதியான அனைத்து உதவிகள் கிடைக்க உதவி செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News