செய்திகள்

தாயின் எலும்பு கூடுடன் வசித்த பெண் பிணமாக கண்டெடுப்பு

Published On 2017-02-25 18:39 GMT   |   Update On 2017-02-25 18:39 GMT
ஆறு மாத காலம் தாயின் எலும்பு கூடுடன் பாழடைந்த வீட்டில் வசித்து வந்த பெண்மனி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஆக்ரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா:

உத்திர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா அருகே அர்ஜூன் நகரில் பாழடைந்த வீட்டில் தாயின் எலும்பு மிச்சங்களுடன் ஆறு மாதம் வசித்து வந்த பெண்மனி அதே வீட்டினுள் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த சில தினங்களாக பாழடைந்த வீட்டில் இருந்து தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வெளியேறுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இது குறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பகுதிவாசிகள் அளித்துள்ள புகாரின் பேரில் பாழடைந்த வீட்டில் ஆய்வு செய்த போலீசார் அங்கு எலும்பு கூடு மற்றும் பெண்மனி ஒருவரின் பிணம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். பின் பிணத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்ய அனுப்பியுள்ளனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள பெண்மனி 45-வயதுடையவர் என்றும் அவரது பெயர் பீனா என்றும் காவல் துறையை சேர்ந்த சுனில் ஷர்மா தெரிவித்தார். பிணத்துடன் வீட்டில் இருந்த எலும்பு கூடு சுமார் ஆறு மாத காலம் அங்கேயே இருந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Similar News