செய்திகள்

மாமூல் வாங்குவதில் திருநங்கையர்களுக்கு இடையில் எல்லை தகராறு - அடிதடியில் இருவர் படுகாயம்

Published On 2017-02-25 10:39 GMT   |   Update On 2017-02-25 10:38 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அன்பளிப்பு மற்றும் மாமூல் வாங்குவதில் திருநங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட ‘ஏரியா’ தகராறு மற்றும் அடிதடியில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் கைராலா நகர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பணக்காரர்கள் வீடுகளில் அன்பளிப்பு மற்றும் மாமூல் வாங்குவது யார்? என்பது தொடர்பாக இங்கு வசித்துவரும் திருநங்கையர் இனத்தை சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையில் நேற்று தகராறு ஏற்பட்டது.

அப்பகுதியில் தலைவிபோல் செயல்பட்டு வரும் பப்லி என்பவர் வீட்டுக்குள் எதிர்தரப்பை சேர்ந்த ஐந்து திருநங்கைகள் நுழைந்தனர். ஆரம்பத்தில் வாக்குவாதமாக தொடங்கிய இந்த தகராறு பின்னர் கைகலப்பாக முற்றியது.

இருதரப்பினரும் கற்கள் மற்றும் கட்டைகளால் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

இந்த மோதலில் பப்லி மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தனர். அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகிவிட்ட நகிங், ரூபி, பென்ட், ரேஷ்மா மற்றும் புத்தி ஆகிய ஐந்து பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News