செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு

Published On 2017-02-23 07:16 GMT   |   Update On 2017-02-23 07:16 GMT
உத்தரபிரதேசத்தில் தொங்கு சட்ட சபை அமையவே அதிக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஒரு சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரபிரசேத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.

இந்த தேர்தலில், சமாஜ் வாடி-காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி மதியம் உத்தர பிரதேசத்தில் புதிய ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும். கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

ஆனால் தற்போது அங்கு சூழ்நிலை மாறியுள்ளது. எனவே எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும் பான்மை பலம் கிடைக்காது என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். தொங்கு சட்ட சபை அமையவே அதிக வாய்ப்பு இருப்பதாக சமிபத்திய ஒரு சர்வேயிலும் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் சாதகமான அலை இல்லாததே தொங்கு சட்ட சபைக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. பொதுவாக தேர்தலில் ஆலும் கட்சிக்கு எதிராக அலை வீசும்.

ஆனால் அகிலேஷ்-ராகுல் கூட்டணி ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு அலையை குறைத்துள்ளது. ரூபாய் நோட்டுகள் விவகாரம் காரணமாக பா.ஜ.க மீது அதிருப்தி ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது.


ஆனால் அந்த வி‌ஷயத்தில் பா.ஜ.க மீது அதிருப்தி ஏற்படவில்லை. ஆனால் பா.ஜ.கவில் வலுவான பிரசாரம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

அது போல் மாயாவதி மீதான ஊழல் இமேஸ் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்களை கிடைக்க செய்யாது என்று கூறப்படுகிறது. இப்படி 3 கட்சிகளிலும் வாக்குகள் பிரிவதால் உத்தர பிரதேசத்தில் தொங்கு சட்ட சபைக்கே அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Similar News